சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தின் முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “ஜெயிலர்” திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர மேலும் சில நடிகர்களும் நடித்து வருகின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் கடலூருக்கு அருகில் நடந்து வந்தது. படப்பிடிப்பு தளத்தில் எடுத்த ரஜினியின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலானது. “ஜெயிலர்” படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதத்துக்கு மேல் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. “ஜெயிலர்” திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகுமென தெரிகிறது. “ஜெயிலர்” படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சிவா, “இப்படத்தில் மொத்தம் 7 சண்டைக் காட்சிகள் முடிந்துள்ளது. இவை அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. ரசிகர்களுக்கு பிடித்தமானதாக ஆக்ஷன் காட்சிகளாக இருக்கும்” கூறியுள்ளார்.