சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்துள்ளார் “லவ்டுடே” பத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான திரைப்படம் “கோமாளி.” இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். “கோமாளி” வெற்றியை அடுத்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் “லவ்டுடே.” இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பிரதீப் ரங்கநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில், “இதைவிட வேறென்ன கேட்க முடியும்? சூரியனுக்கு அருகில் நிற்பது போலிருந்தது. இறுக்கமான அணைப்பு, கண்கள், சிறிப்பு, ஸ்டைலிஸ் அவரது ஆளுமை எல்லாம் சூப்பர் ஸ்டாரை பார்த்தபோது. லட் டுவ்டே படத்திற்காக அவர் என்னை பாராட்டினார். அவர் கூறியதை நான் என்றும் மறக்க மாட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.