இசைஞானி இளையராஜா நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோயம்புத்தூரில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ரிகர்சல் பணிகளுக்காக இளையராஜா கோயம்புத்தூர் போக உள்ளார். அதற்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார். ரஜினியின் பெரும்பான்மையான படங்களுக்கு தேவா, ஏ.ஆர்.ரகுமானுக்கு முன்னதாக பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் இளையராஜா.