சூப்பர் ஸ்டார் படத்தின் தலைப்பு இதுதான்!

Filed under: சினிமா |

ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் “தலைவர் 170.”

கடந்த சில மாதங்களாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் டைட்டில் டீசர் வீடியோ இன்று வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்திற்கு “வேட்டையன்” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. “சந்திரமுகி” திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டராக “வேட்டையன்” என்ற கேரக்டரை ஏற்று நடித்த ரஜினிகாந்த் இப்படத்தில் முழுவதுமாக அந்த கேரக்டரை ஏற்று நடித்துள்ளார். ரஜினியுடன் அமிதாப்பச்சன் நடித்துள்ள இப்படம் ’ஜெயிலர்’ என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பின் வெளியாகவுள்ள திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் “வேட்டையன்” என்ற டைட்டிலை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.