சூப்பர் ஸ்டார் வில்லன் இறந்துட்டாரா?

Filed under: சினிமா |

சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான “சிவாஜி” திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் இறந்ததாக சில சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் இந்த நடிகர் பதறிப்போய் உள்ளார்.

“சிவாஜி” திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடித்தவர் சுமன். இவர் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருக்கிறார். முன்னணி நடிகர் பலருக்கும் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியான “லெஜெண்ட்” திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த சுமன் தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக சில யூடுப் சானல்களில் தகவல்கள் பரவின. இதையடுத்து சுமன் இந்த வதந்தியை மறுத்துள்ளார். அவர், “நான் நன்றாக இருக்கிறேன், யாரும் பொய்யான தகவலை நம்பவேண்டாம். மேலும் இதுபோன்று பொய்யான தகவலை பரப்புபவர்கள் மீது வழக்கு தொடுக்க இருக்கிறேன்” என்றார்.