இந்தியில் சூரரைப் போற்று திரைப்படம் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவான “சூரரைப்போற்று” திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றிக் கண்டது. இத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடங்குகிறது. சூர்யா கேரக்டரில் அக்சய்குமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பதாகவும் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் இந்தி படம் இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைக்கபோவது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷே இந்தி படத்துக்கும் இசையமைக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். கேங்ஸ் ஆஃப் வாசிபூர் படத்துக்குப் பின்னர் ஜி.வி.பிரகாஷ் இந்தி படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.
இந்த படத்தில் அக்ஷய் குமார் தவிர்த்து மற்றொரு பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான ஹ்ருத்திக் ரோஷனும் நடிக்க உள்ளாராம். ஆனால் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பதை மட்டும் மிகவும் ரகசியமாக வைத்துள்ளதாம் படக்குழு.