“சூரரைப் போற்று” ரீமேக்கில் சரத்குமார்?

Filed under: சினிமா |

“சூரரைப்போற்று” சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம். தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இயக்குனர் சுதா கொங்கராவுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சில மாதங்கள் தடைபட்டது. இப்போது படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் மோகன் பாபு நடித்த வேடத்தில் அவர் நடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்துக்கு இந்தியில் ‘ஸ்டார்ட் அப்’ என பெயர் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.