சூர்யா வெளியிட்ட ஜிவி.பிரகாஷ் பட டீசர்

Filed under: சினிமா |

நடிகர் சூர்யா ஜிவி பிரகாஷ்குமாரின் “கள்வன்” திரைப்படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி.பிரகாஷ்குமார் நடித்துள்ள திரைப்படம் “கள்வன்.” படத்தை அறிமுகம் இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனம்தான் “பேச்சிலர்,” “ராட்சசன்” ஆகிய படங்களைத் தயாரித்திருந்தது. “கள்வன்” படஷூட்டிங் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில், இப்படத்தின் மோசன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர். அதன்பின்னர் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இன்று ஜிவி பிரகாஷின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு ஒரு புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது. இப்போஸ்டர் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.