முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட உடனே அமைச்சர் செந்தில் நெஞ்சுவலி என்று கூறியதா£ல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து கருத்து தெரிவித்த முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் “30 சதவீதம் அடைப்பிற்கு ஆஞ்சியோகிராம் செய்தது உலகிலேயே இங்கேதான். இன்றைக்கு தவறு செய்தவர்கள் நாளை தண்டிக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது புகார் வந்தவுடன் அவரை அமைச்சரவையில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். ஆனால் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு இருந்த நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்று அவர் கூறினார்.