செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது எப்போது?

Filed under: அரசியல்,தமிழகம் |

இன்று சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது எப்போது? என்பது குறித்த விசாரணை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது விசாரணை நடைபெறவுள்ளது. இன்றைய விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு நடத்தவுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை எந்த தேதியில் இருந்து அமலாக்கத்துறை காவலில் எடுக்கலாம் என இரு நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் என 3வது நீதிபதி கூறியிருந்த நிலையில் காவலில் எடுக்கும் தேதி இன்று முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைக்கு பின் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.