செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் பற்றி அண்ணாமலை விளக்கம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் இன்னும் வாபஸ் பெறப்படவில்லை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக கவர்னர் டிஸ்மிஸ் செய்வதாக அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அவரது உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அவர் தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் திரும்ப பெறப்பட்டதாக தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்த விளக்கத்தில், “செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த அறிவிப்பை வாபஸ் பெற்றதாக கவர்னர் கூறவில்லை. உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உள்ள செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பது ஏன் என்ற கேள்வி எழும் அவர் எழுப்பியுள்ளார். மேலும் அமைச்சரவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியாக கையாளவில்லை. ஒரு அமைச்சருக்காக முதலமைச்சர் வரம்பு மீறி செயல்படுகிறார்” என்று அவர் குற்றம் சாட்டினார்.