செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து 3 மனுக்கள் தாக்கல்?

Filed under: அரசியல்,தமிழகம் |

செந்தில் பாலாஜி தரப்பில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையை தாமதப்படுத்தவே செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்கிறார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. சட்டவிரோத பண பரிமாற்றக் குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார். இன்னும் இந்த வழக்கு ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து அடுத்தடுத்து ஜாமீன் மனுக்கள் மட்டுமின்றி இந்த வழக்கு குறித்த புதிய மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருவதால் தான் வழக்கு தாமதமாகிறது என்று கூறப்படுகிறது. இன்று அவர் மீண்டும் மூன்று புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.