சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கரூரில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர். இன்று காலை 7.30 மணியளவில் அங்கு கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த வீட்டிற்கு பல முறை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடைபெற்றது. மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.