செல்போன் விளம்பரத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்!

Filed under: சினிமா |

உலகளவில் பிரபல இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி தெலுங்கு சினிமாவில் “மகதீரா,” “நான் ஈ,” “பாகுபலி” மற்றும் “ஆர்.ஆர்.ஆர்.” என அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். கடைசியாக அவர் இயக்கிய “ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படம் 1200 கோடி ரூபாய் வசூலித்தது.

“ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்போது ராஜமௌலி ஓப்பொ செல்போன் விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கான வீடியோக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. விரைவில் இந்த விளம்பரம் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.