இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை முறைப்படி பிரதமரும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான மோடி மரியாதையுடன் அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர்.
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கொடுத்த மரியாதை கொடுத்து காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் தொடர்ந்து மூன்று தேர்தல்களாக இரட்டை இலக்கத்தை கூட தாண்டாத ஒரு கட்சியின் தலைவருக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கிடைப்பது ஜனநாயகத்திற்கு அழகு. இதனை ராகுல் காந்தியின் சாதனையாக பேசுவது செல்வபெருந்தகையின் அறியாமையை காட்டுகிறது என்று செல்வபெருந்தகைக்கு அண்ணாமலை பாடம் எடுத்துள்ளார்.