செல்வராகவனின் டுவிட்டர் தத்துவம்!

Filed under: சினிமா |

சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் செல்வராகவனின் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. அதோடு மட்டுமல்லாமல் மிக மோசமான ரசிகர்களிடம் இருந்து பெற்று வருகின்றன.

தனுஷ் நடிப்பில் “நானே வருவேன்” திரைப்படத்தை இயக்கினார். அவர் நடிகராக அறிமுகமான ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன. அடுத்து “பகாசூரன்” திரைப்படம் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதற்குப் பின்னர் இன்னும் அவர் அடுத்து இயக்கும் படத்தைப் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. செல்வராகவன் டுவிட்டரில் அடிக்கடி தனது அனுபவப் பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார். அப்படி இப்போது “அவர் சொல்கிறார் என கொஞ்சம், இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது. கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.