திமுக எம்பி பார்த்திபன் சேலம் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்கப்படும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து எம்.பி.பார்த்திபன் கூறுகையில், “சேலம் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும். இதுவரையில் விமானத்தில் பயணம் செய்யாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் 100 பேருக்கு தனது சொந்த செலவில் விமான பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். சேலம் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு கடந்த 2018ம் ஆண்டு முதல் விமான சேவை செயல்பட்டு வந்தது. ஆனால், கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் சேலத்தில் விமான சேவை கொண்டு வர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். சமீபத்தில் பெங்களூரு – சேலம் -கொச்சி வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்பட்டது. சேலம் விமான நிலையத்தை கலைஞர் விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது” என்று கூறினார்.