ஜவான் நிகழ்ச்சியில் யோகி பாபு பேச்சு!

Filed under: சினிமா |

தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இத்திரைப்படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள யோகி பாபு சென்னையில் நடந்த ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது “இயக்குனர் அட்லி தமிழில் எப்படி ஆளுமையோ, அது போல இந்தியிலும் அவர் ஒரு ஆளுமைதான். ஹாலிவுட்டுக்கும் சீக்கிரம் செல்லுங்கள். அங்கேயும் ஆளுமையாக வருவீர்கள். நீங்கள் ஹாலிவுட்டுக்கு சென்றால் நானும் உங்களுடனேயே வந்துவிடுவேன்” என்று கூறினார். செப்டம்பர் 7ம் தேதி ரிலீசாகவுள்ள “ஜவான்” படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா இன்று துபாயில் பிரம்மாண்டமாக நடக்கிறது.