கூகுள் நிறுவனம் டிசம்பர் 1ம் தேதி முதல் பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை முடக்க முடிவு செய்துள்ளது. நாளை கடைசி தினம் என்பதால் ஜிமெயில் வைத்திருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பயன்படுத்தப்படாத கணக்குகள் அதாவது இரண்டு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்று அறிவித்திருந்தது. பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகள், ஜிமெயில்கள், யூடியூப் சேனல்கள் அனைத்தும் நீக்கப்படும் வாய்ப்புள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இக்கணக்குகளை நிரந்தரமாக நீக்க உள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இப்பணியை டிசம்பர் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. எனவே கூகுள் பயனர்கள் நாளைக்குள் தங்கள் கணக்குகளிலுள்ள கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து ஒரு முறையாவது உள்ளீடு செய்து தங்கள் கணக்குகளை காப்பாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக கூகுள் அனைத்து ஜிமெயில் கணக்குகளுக்கும் எச்சரிக்கை செய்தியையும் அனுப்பி வருகிறது.