ஜூலை மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2026 – 27ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவாக இருந்து வரும் நிலையில் இந்த முடிவிலிருந்து விலக்கு பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மின்சார கட்டணத்தை ஜூலை மாதம் முதல் உயர்த்தும் முடிவை மின்சார வாரியம் உடனே கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே மின்கட்டணம் சொத்து கட்டணம் உள்பட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் மின் கட்டண உயர்வு என்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.