ஜென்டில் மேன் 2 திரைப்பட அப்டேட்!

Filed under: சினிமா |

“ஜென்டில் மேன் 2” திரைப்படத்தை மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம்.

கி.கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், சேத்தன் கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்று புறங்களில் பதினைந்து நாட்கள் நடைபெற்று நிறைவுற்றது. இதில், சேத்தன், நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால், படவா கோபி, சுதா ராணி, சித்தாரா, லதா, கண்மணி, “லொள்ளு சபா” சாமிநாதன், பேபி பத்ம ராகா மற்றும் முல்லை – கோதண்டம் ஆகியோர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட பிரபல நடிகர் நடிகைகள் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது சிறப்பம்சமாகும். இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் எம்.எம்.கீரவாணி, கவி பேரரசு வைரமுத்து கூட்டணியின் ஏழு பாடல்கள் படத்தில் இடம் பெறுகிறது. அஜயன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டா தரணி கலை இயக்குநராக பணியாற்றுகிறார். படத்தொகுப்பு சதீஷ் சூரியா, நடனம் பிருந்தா, ஆடை வடிவமைப்பு பூர்ணிமா ராமசாமி, ஸ்டைலிஸ்ட் செரீனா டிசெரியா, தயாரிப்பு மேற்பார்வை -முருகு பூபதி, சரவண குமார், ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.