முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அரசியலில் எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியலில் எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என பலர் கூறுவார்கள் என்பதும் அதற்கு பொருள் எதிரி போல் இருந்தவர்கள் திடீரென நண்பராகி விடுவார்கள் என்பதும் நண்பராக இருந்தவர்கள் திடீரென எதிரி ஆகி விடுவார்கள் என்பதும் இதெல்லாம் அரசியலில் சகஜம் என்றும் கூறப்படுவது உண்டு. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டணி குறித்த கேள்விக்கு அரசியலில் எதிரிகளும் இல்லை நண்பர்களும் இல்லை, எது வேண்டுமானாலும் நடக்கலாம் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார். அப்படி என்றால் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்படும் என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளாரா என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதேபோல் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியவர்களையும் அதிமுக எதிரி போல் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களும் அதிமுகவில் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.