முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திமுகவில் அமைச்சர்கள் ஜோக்கர்கள், அடாவடி செய்பவர்கள் தான் உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவில் ஜோக்கர்கள் மற்றும் அடாவடி செய்பவர்கள்தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள், பொதுமக்களை அடிப்பவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளை அசிங்கப்படுத்துபவர்கள்தான் திமுகவில் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். இதுவரை தமிழ்நாட்டில் கல் தூக்கி அடித்த ஒரு அமைச்சரை பார்த்ததில்லை. தமிழ்நாடு வெட்கி தலைகுனியும் ஜோக்கர் அரசுதான் தற்போது நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் புரட்சி செய்வார்கள். மக்களின் புரட்சிக்கு முன் எதுவும் எடுபடாது. எத்தனை பேர் வந்தாலும் அதிமுக ஜெயிப்பது உறுதி. திமுகவின் பீ டீம் தான் கமல்ஹாசன் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது என்றும் அவர் கூறினார்.