ஜெயம் ரவி படத்தின் பர்ஸ்ட் லுக்!

Filed under: சினிமா |

சமீபத்தில் கிருத்திகா உதயநிதி ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் 33வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் இவர்களுடன் யோகி பாபு, மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு “காதலிக்க நேரமில்லை” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏஆர் ரகுமான் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.