ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கில் எப்போது?

Filed under: சினிமா |

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் “ஜெயிலர்” படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. “ஜெயிலர்” திரைப்படத்தில் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இண்டர் நேசனல் நிறுவனம் கைப்பற்றியது. “ஜெயிலர்” திரைப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இன்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், நெல்சன் திலீப்குமார், “வார வாரம் இப்படியே கேட்டிட்டு இருந்தீங்கன்னா எப்படி? எத்தனை வாரம் கேட்டாலும் நீங்களா மியூசிக்.. பாட்டு தர்னன்னீங்க?” என்று கேட்க. அதற்கு அனிருத் மௌனமாக இருப்பது போன்ற வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.