அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது. ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியது தவறு என்று தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே ‘ஜெயிலர்’ படத்தை தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.