ஆகஸ்ட் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
இத்திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இப்படம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த படம் சுமார் 3 மணி நேரம் ஓடுகிறது. ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.