“ஜெயிலர்” முதல்நாளில் ரூ.100 கோடி வசூல்?

Filed under: சினிமா |

இன்று ரஜினியின் நடிப்பில் “ஜெயிலர்” திரைப்படம் உலகம் முழுதும் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீசான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜெயிலர்.” படம் இன்று உலகம் முழுதும் உள்ள திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. நேற்று காலை 9 மணிக்கு வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இதனால் இயக்குனர் நெல்சன் “பீஸ்ட்” படத்திற்குப் பிறகு “ஜெயிலர்” திரைப்படத்தை வெற்றிப் படமாக்கியுள்ளார். இதற்கு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. நேற்று வெளியான முதல் நாளில் மட்டும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. எனவே, இனிவ்ரும் நாட்களிலும் வாரக் கடைசியிலும் இப்படம் வசூலில் சாதனை படைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, கமலின் “விக்ரம்‘, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் தமிழ் சினிமாவின் வசூலில் புதிய சாதனை படைத்துள்ள மாதிரி இப்படமும் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.