“டன்கி” படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

கடந்த சில ஆண்டுகள் ஷாருக் கானுக்கு மோசமான அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

2023ம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன “பதான்” மற்றும் “ஜவான்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் “டன்கி” திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என ஷாருக் கான் அறிவித்திருந்தார். ஏற்கனவே படத்தின் முதல் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்போது ஒரு பாடலின் துணுக்கு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ”Lutt putt gayya” என தொடங்கும் அந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.