புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சனாதனம் என்றால் என்ன என்ற அரிச்சுவடி கூட தெரியாமல் அமைச்சர் உதயநிதி பேசி வருகிறார் என்று தெரிவித்தார்
இதுகுறித்து அவர் பேட்டியில் கூறும்போது, “சனாதனம் என்பது மனித குலத்தையும் தாண்டி எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தக்கூடியது, சனாதனத்தை பற்றி அரிச்சுவடி கூட தெரியாமல் உதயநிதி பேசுவார், அது தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது. இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்ற உணர்வோடு பேசுகின்றனர். இது கைவிடாவிட்டால் மிகப்பெரிய விளைவு உருவாகும். இந்தியா என்பதும் பாரதம் என்பதும் ஒன்றுதான் பாரதம் என முன்பே பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டும், கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை அமைச்சரவையில் வைத்திருப்பது அழகல்ல என்ற நீதிமன்றம் கூறியுள்ளதை அடுத்து இனியாவது செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவி இழந்து விடுவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.