“டான்” திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.
“டான்” திரைப்படம் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் நேற்று வெளியாகியது. டிரெய்லரில் சிவகார்த்திகேயன் காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் போன்ற காட்சிகள் அதிகமாகவே இருக்கிறத. மேலும் இந்த டிரெயிலர் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது.
திரைப்படத்தின் டிரெயிலர் மற்றும் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலின் “சினிமாவில் இப்போது ரெண்டு டான் இருக்காங்க. ஒன்னு சிவகார்த்திகேயன். இன்னொன்னு அனிருத்” என புகழ்ந்து பேசியுள்ளார்.
திரைப்படத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி பேசும் போது, “இந்த திரைப்படத்தில் பல காட்சிகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது. கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய பல காட்சிகள் இருந்தன, என்னால் அதைச் செய்ய முடியவில்லை. சிபி ஸ்கிரிப்டை சொன்ன போது, அது என் வாழ்க்கையை மீட்டெடுத்தது போல் இருந்தது. சிபி இப்படம் மூலம் பெரிய உயரத்தை எட்டப் போகிறார், மேலும் பார்வையாளர்களுக்கு இந்த திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் படத்தின் மூலம் என் அப்பா எனக்குள் நுழைந்தது போல் இருந்தது. டான் ஒரு பிளாக்பஸ்டராக இருக்கும், மேலும் சிவகார்த்திகேயன் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பார். இப்படத்தில் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். அனிருத் நாடு முழுவதும் அறிந்த ஒரு சிறந்த இசையமைப்பாளராகிவிட்டார். பிரியங்கா பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போலவே இருக்கிறார், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. சிவகார்த்திகேயன் இன்னும் உயரத்திற்கு செல்ல அனைத்து ரசிகர்களும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.