அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் “இரட்டை இலை என்றால் டெபாசிட் போயிருக்கும்” என்று அதிமுகவின் தோல்வி குறித்து பேசியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் போது செயலாளர் டிடிவி தினகரன், “ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு மிகவும் கஷ்டப்பட்டு தான் டெபாசிட் தொகையை பெரும் அளவுக்கு வாக்குகளை பெற்றார். திமுகவுக்கு நிகராக அதிமுகவினரும் பணம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார்கள். இரட்டை இலை சின்னம் கிடைத்தும் அவர்கள் படுதோல்வி அடைந்திருப்பது பார்க்கும்போது இரட்டை இலை சின்னம் இல்லை என்றால் டெபாசிட் போய் இருக்கும். ஆட்சி அதிகாரம் இருந்தபோது திமிர் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதால் தான் மக்கள் வெறுப்பின் காரணமாக அதிமுக தோல்வி அடைந்துள்ளது. துரோகத்தினால் வளர்ந்து வரும் இந்த கட்சிக்கு காலம் தான் பதில் சொல்லும், காலம் நிச்சயம் அவர்களுக்கு தகுந்த தண்டனையை கொடுக்கும், அதிமுக தலைவர்களை வசப்படுத்தி வைத்திருப்பதாலோ தொண்டர்கள் எல்லோரும் என் பின்னால் தான் இருக்கின்றார்கள் என்று சொல்வதாலோ எடப்பாடி பழனிச்சாமி ஒரு தலைவராக முடியாது” என்று அவர் கூறினார்.