டில்லியில் முகக்கவசம் கட்டாயம்!

Filed under: இந்தியா |

தலைநகர் டில்லியில் முகக்கவசம் அணிவது கட்டாயமென அரசு உத்தரவிட்டள்ளது.

கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் இந்தியாவில் மொத்த எண்ணிக்கை 44,203,754 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 526,826 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 43,535,610 என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

டில்லி உட்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டி மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.500அபராதம் என அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு எச்சரித்துள்ளது. மேலும், தனியாருக்குச் சொந்தமான வாகனங்களில் செல்வோருக்கு இந்த விதியில் இருந்து விதிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டில்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கறிஞர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை தலைமை நீதிபதி என்.வி.ரமணா கட்டாயமாக்கியுள்ளார்.