டில்லி அரசியலில் பரபரப்பு!

Filed under: அரசியல்,இந்தியா |

இன்று சமூக நலத்துறை அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் டில்லியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையிலடைத்தனர். இதுகுறித்த வழக்கு டில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்று நீதிமன்றம் கூறியது. இவ்வழக்கில் ஏற்கனவே எம்பி.சஞ்சய் சிங்கும், கவிதாவும் கைதாகி சிறையிலடைக்கப்பட்டார். சஞ்சய் சிங்கிற்கு மட்டும் கடந்த ஏப்ரல் 2ம் தேதி ஜாமீன் வழங்கியது. டில்லி சமூக நலத்துறை அமைச்சரும், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் ஆனந்த் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் கட்சியிலிருந்தும் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.