டில்லி மகளிர் ஆணையத்தில் 223 ஊழியர்கள் நீக்கம்!

Filed under: அரசியல்,இந்தியா |

டில்லி மாநில ஆளுநர் வி.கே.சக்சேனா மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் விதிகளை மீறி நியமிக்கப்பட்டதாக கூறி அவர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார்.

ஆளுநர் அலுவலகத்திலிருந்து டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக நிறைய ஊழியர்களை நியமனம் செய்ததாகவும், ஒப்பந்த அடிப்படையில், சரியான அணுகுமுறை இல்லாமல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் விதிகளுக்கு மீறியிருப்பதால் டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவின் பேரில் டில்லி மகளிர் ஆணையத்திலிருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்படுவதாக சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. 223 ஊழியர்கள் இத்தனை வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில், ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்படவில்லை. முன்னாள் தலைவராக இருந்த ஸ்வாதி மாலிவால் எந்தவொரு கேள்வியும் இன்றி நியமனம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணை முடிவுகளின்படி, 40 பணியாளர்களே நியமிக்க சட்டம் இருக்கும் நிலையில், முறைகேடாக 223 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளதாகவும், ஆளுநரின் ஒப்புதலின்றி நியமிக்கப்பட்ட இந்த பணியிடங்கள் ரத்து செய்யப்படுகிறது என்றும் ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க டில்லி மகளிர் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் ஆளுநரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.