டி.ஆர்.எஸ். கட்சி, சொந்த தொகுதியில் கூட ஜெயிக்க முடியாதவர் ராகுல் காந்தி என்று பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா சமிதி கட்சி தேசிய கட்சியாக உருவானது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெலுங்கானா சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று அவர் சர்வதேச கட்சியை நடத்துவதாக நினைத்துக் கொள்ளலாம் என்றும் விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் பேசியபோது சொந்த தொகுதியான அமேதியில் கூட வெற்றி பெற முடியாத சர்வதேச தலைவர் ராகுல்காந்தி என்றும் அவர் எங்கள் கட்சியை விமர்சனம் செய்ய தகுதி இல்லாதவர் என்றும் கூறியுள்ளார். பிரதமர் ஆவதற்கு முதலில் எம்பியாக தேர்வு செய்ய மக்களை சமாதானப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தெலுங்கானா சமிதி கட்சியின் இந்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.