டி இமானுடன் முதல் முறை இணைந்த மனோ!

Filed under: சினிமா |

இசையமைப்பாளர் டி இமானும் பிரபல பாடகர் மனோவும் முதல் முறையாக கைகோர்த்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள ‘லெவன்’ திரைப்படத்திற்காக இமான் இசையில் மனோ பாடியுள்ளார்.

இதுகுறித்து மனோ கூறும்போது, “இமான் இசையை தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக பாடுவது மிக்க மகிழ்ச்சி. உயிரோட்டமிக்க இந்த பாடல் பெரிதும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன்” என்றார். இது குறித்து டி இமான் கூறும்போது, “மனோ அவர்களுடன் இணைந்து பணியாற்றவில்லை என்ற ஏக்கம் பல காலமாக இருந்தது, இன்று அது பூர்த்தியாகி உள்ளது அவரது குரலுக்கு மிகவும் உகந்த பாடலை உணர்ச்சிப்பூர்வமாக அவர் பாடியுள்ளார்,” என்று தெரிவித்தார்.