“லியோ” திரைப்படம் சமீபத்தில் விஜய்யின் நடிப்பில் ரிலீசாகி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இப்படத்தையடுத்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் “தளபதி 68” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர்.
“தளபதி 68” திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படம் ஹாலிவுட்டில் 2012ம் ஆண்டு வெளியான “லூப்பர்” படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படம் காலப்பயணம் பற்றிய படம் என்று சொல்லப்படுகிறது. இதில் அப்பா மகன் என்ற இரு வேடங்களில் விஜய் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெங்கட் பிரபு “மாநாடு” என்ற டைம் டிராவல் பற்றிய ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கி இருந்தார்.