தக்காளி விலை கிடுகிடு ஏற்றம்!

Filed under: தமிழகம் |

தக்காளி விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வெளிவந்த தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

கடந்த சில நாட்களாக தக்காளி கிலோ 15 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் தக்காளி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தாலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு 80 லாரிகளில் தக்காளி வரும். ஆனால் தற்போது 40 லாரிகளில் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.