“தக்லைஃப்” திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
“நாயகன்” படத்திற்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு உருவாகவுள்ள படம் “தக்லைஃப்.” சமீபத்தில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர்-ரஹ்மான் இசையமைக்கிறார். ‘தக்லைஃப்’ படத்தில் ஏற்கனவே ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது. இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேசனல் பிலிம்ஸ் இன்று ‘தக்லைஃப்’ படத்தின் முக்கியய அப்டேட் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் “தக்லைஃப்” படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இனி இப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று கூறப்படுகிறது.