விருதுநகர் தொகுதி வேட்பாளர் விஜய பிரபாகரன் அதிமுக தேமுதிக கூட்டணி வெற்றி கூட்டணி என்றும் இக்கூட்டணி மக்களவை தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் தொகுதியில் கேப்டனின் மூத்த மகன் விஜய பிரபாகரன் களம் இறக்கப்பட்டுள்ளார். விருதுநகரில் தேர்தல் பரப்புரையில் விஜய பிரபாகரன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “எடப்பாடி அண்ணன் எப்போதும் அழகா சிரிப்பாரு, தலைமை அழகா சிரித்தால் தான் கீழே இருக்கும் தொண்டர்கள் வரை சிரிப்பார்கள். அதிமுகவில் உள்ள அனைவரும் என்னை அரவணைத்து, உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை பார்க்கிறார்கள். அதிமுக தேமுதிகவில் எந்த வேறுபாடும் இல்லை, அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். அதனால் தான் எம்ஜிஆர், கருப்பு எம்ஜிஆர் என்ற பெயர் வந்ததா கூட எனக்கு தெரியவில்லை. இக்கூட்டணி ராசியான கூட்டணி, இது நிச்சயம் தொடரும். ஒருவாட்டி மிஸ் ஆகும், எப்பவுமே மிஸ் ஆகாது, 2011ல் ஜெயலலிதாவும், கேப்டனும் ஆரம்பிச்ச கூட்டணி இக்கூட்டணி. கேப்டனை குழப்பி ஒரு கும்பல் திமுகவுக்கு சென்று விட்டது, மறு கும்பல் ஓபிஎஸ் உடன் சென்று விட்டது. மீண்டும் கஷ்டப்பட்டு இக்கூட்டணி சேர்ந்துள்ளது, எதிர்காலத்தில் இக்கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும், எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா ஆகிய இருவரும் ராசியானவர்கள் என்பதால், இரு தலைமையும் சேரும்போது மக்களுக்கு பொன்மனச் செம்மல் எம்ஜிஆரின் ஆட்சி போன்று சிறப்பாக இருக்கும்” என்று விஜய பிரபாகரன் கூறினார்.