தனுஷின் படத்தில் சிம்பு படத்தின் நாயகி!

Filed under: சினிமா |

“கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷின் ஜோடியாக “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் நாயகி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இத்திரைப்படத்தை அடுத்து அவர் “பியார் பிரேமா காதல்” இயக்குனர் எலான் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாராகவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க சித்தி இத்னானி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவர் “வெந்து தணிந்தது காடு” படத்தில் சூப்பராக நடித்ததை அடுத்து அவருக்கு தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.