நடிகை சுனைனா தனது சமூக வலைதள பக்கத்தில் தனுஷின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுதை அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த “ராயன்” திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றுள்ளது. தற்போது அவர் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் “குபேரா” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா இணைந்துள்ளதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சேகர் அப்துல்லா படத்தில் இணைந்துள்ளேன், அவர் வலுவான பெண்கள் கதாபாத்திரத்தை காட்சிப்படுத்த கூடியவர். படத்தில் இணைந்தது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது’ என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.