தனுஷூடன் இணையும் மெழுகு டோல்!

Filed under: சினிமா |

துறுதுறுப்பான நடிப்புடன் மெழுகு சிலையாக இருக்கும் பிரியங்கா மோகனின் அடுத்தடுத்த படங்கள் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

“டாக்டர்” படத்தின் வெற்றிக்கு இவரது நடிப்பும் ஒரு முக்கியக் காரணம். அப்படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் அவரின் அடுத்த படமான “டான்” படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். சூர்யாவின் “எதற்கும் துணிந்தவன்” படத்திலும் நடித்தார். இம்மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன. ஒரு நடிகைக்கு முதல் மூன்று படங்களும் இப்படி அமைவது அபூர்வமானது.

பிரியங்கா மோகன் அடுத்து நெல்சன் இயக்கும் ரஜினி படத்தில் அவருக்கு மகளாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்து அவர் நடிக்கும் மற்றொரு படம் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. தனுஷ் அடுத்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.