தனுஷை வைத்து படமெடுக்கும் இயக்குனர் ஒரே ஷெட்யூலில், 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.
அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் “கேப்டன் மில்லர்” என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்ப்பட்டது. இப்படத்தை ஒரே ஷெட்யூலில் 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் அருண் மாதேஸ்வரன் இயக்கிய இரண்டு திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இப்படம் இருக்கும் என்றும் இப்படம் தனுஷின் திரையுலக வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.