தனுஷ் படத்தில் பாலிவுட் நடிகர்!

Filed under: சினிமா |

கடந்த சில நாட்களுக்கு முன் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

இத்திரைப்படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் முக்கிய வேடத்தில் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் மேலும் சில முக்கிய நட்சத்திரங்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவ்வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜிம்சர்ப் என்பவர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் கடந்த 2014ம் ஆண்டு முதல் ஏராளமான திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது தென்னிந்திய மொழியிலும் நடிக்க வந்திருப்பது இந்த படத்திற்கு கூடுதல் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.