நடிகர் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான “தி க்ரே மேன்” படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஹாலிவுட் இயக்குனர்கள் ரஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் ரியான் கோஸ்லிங், க்ரிஸ் எவான்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் “தி க்ரே மேன்.” இப்படத்தில் நடிகர் தனுஷும் நடித்திருந்தார். நெட்ப்ளிக்ஸில் வெளியான இப்படத்தில் தனுஷ் நடித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் சில காட்சிகள் மட்டுமே தனுஷ் வந்தது சிலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் உலகளவில் “தி க்ரே மேன்” படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. “தி க்ரே மே”னின் இரண்டாம் பாகத்திற்கான பணியில் ரஸோ பிரதர்ஸ் இறங்கியுள்ளனர். தனுஷுக்கு முக்கியமான ரோல் உள்ளதாக ஏற்கனவே ரஸோ பிரதர்ஸ் கூறியிருந்தனர். இரண்டாம் பாகத்தில் தனுஷ் படம் முழுவதுமே வர உள்ளாராம். மேலும் தனுஷுக்கு ப்ளாஸ்பேக் காட்சிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. “க்ரே மேன்” படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தான் தயாராகிவிட்டதாக சமீபத்தில் தனுஷ் வெளியிட்ட ஆடியோவும் வைரலாகி உள்ளது.



