நடிகை தமன்னா தனது திரைப்பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், திரையுலகில் தான் சாதிக்க விரும்பியதை சாதித்து விட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, “எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் நாம் நினைத்தது எல்லாம் உடனுக்குடன் நடந்துவிடாது எதற்கும் கால நேரம் என்று வரவேண்டும், அது வரை நாம் காத்திருக்க வேண்டும். அது போல தான் சினிமாவில் எனக்கு ஆரம்ப காலத்தில் எனக்கு பிடித்த கேரக்டர் கிடைக்கவில்லை என்றாலும் போக போக நான் நடித்த கதாபாத்திரங்களில் எனது திறமையை காட்ட வேண்டும் என்று விரும்பினேன். சினிமாவில் நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ அதை நான் செய்து சாதித்து விட்டேன். எனது திரையுலக பயணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது திருப்தியாகவும் இருக்கிறது” என்றார்.