தற்போது தமிழகத்தில் அரிசியின் விலை கடும் உயர்வால் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
அரிசியின் விலை கடந்த சில நாட்களில் கிலோவுக்கு ரூ.17 வரை உயர்ந்துள்ளதாகவும், இதையடுத்து சென்னையில் ஏற்கெனவே கிலோ 60க்கு விற்பனையாகும் அரிசி தற்போது ரூ.68 ஆக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாகவே அரிசி விலை அதிகரித்துள்ளது. அரிசியின் விலை தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பால், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அவதியடைந்த நிலையில் தற்போது அரிசி விலையும் உயர்ந்து ஏழை எளிய மக்களுக்கு பெரும் சுமையாகியுள்ளது.