சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மே 30 வரை மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது
வானிலை ஆய்வு மையம் மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவு வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை மத்திய வங்க கடல் பகுதியில் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும் வாய்ப்பிருப்பதாகவும் நாளை இரவு புயலாக வலுப்பெற்று 26ம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்று வங்கதேசம் மற்றும் மேற்கு வங்க கடற்கரையை நோக்கி கடக்கக்கூடும். இந்த புயல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் மே 30ம் தேதி வரை மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யக்கூடும். தமிழக கடற்கரையோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீச வாய்ப்பு இருப்பதால் இன்றும் நாளையும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.